டீன்ஸ் . ( விமர்சனம்.) பசங்க படம் . பார்க்கலாமா ?
![]()
வித்தியாசமாக சிந்தனை செய்பவர் “என்கிற சிறப்பு உள்ளவர் நடிகர் ,இயக்குநர் ,கவிஞர் என பல பரிணாமங்கள் அமைந்த பார்த்திபன் .
சிறுவர் ,சிறுமியருக்காக எடுக்கப்பட்ட படம் டீன்ஸ் என்கிறார்கள் . அதாவது டைட்டில்படி பார்த்தால் விடலைப் பருவத்தினருக்கான திரைப்படம். கலயத்தில் கள் குடிப்பது, பருவ மயக்கத்துடன் ‘ஐ லவ் யூ ‘சொல்லுவது இதெல்லாம் அந்த பருவத்து அவசரங்கள் .! ஆனால் படத்தில் வருகிறவர்கள் பதின் பருவத்துக்கானவர்கள் அல்லர்.பொடியன்ஸ் . சிறுமிகளாக நடித்திருப்பவர்கள் விதிவிலக்கு. அசல் டீன்ஸ்.
பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கிராமத்துப் பேயை பார்க்க 13 பேர் போகிறார்கள். வழியில் பலவித அச்சுறுத்தல் ,தடைகள் . எப்படி எதிர்கொண்டு தப்பித்து வீடு அடைகிறார்கள் என்பதுதான் பார்த்திபன் கனவு.!
பசங்க கேமரா பயமில்லாமல் இயல்புடன் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் பேச்சுக்கு பொறுப்பு பார்த்திபன் மட்டுமே.!
யோகி பாபு இடைச்செருகலாக வருகிறார் . போகிறார் .வழிப்போக்கன் .!!!
நாசா ஆய்வாளராக , முக்கியமான கேரக்டரில் பார்த்திபன் .
டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம் .
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி , நிறைவாகச் செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் பார்த்திபன். பேய் பிசாசுகளுக்குப் பதிலாக ஒரு புதுமையை வைத்திருப்பது வரவேற்புக்குரியவை.
–தேவிமணி