சரத்குமாரின் 150 வது படமாக உருவாகும் ‘ஸ்மைல் மேன்’!
நடிகர் சரத்குமாரின் 150 வது படமாக ஸ்மைல் மேன் உருவாகி வருகிறது. இப்படத்தில்,சரத்குமார், சிஜா ரோஸ், இனியா,ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி பேபி ஆலியா, ஶ்ரீகுமார் உள்பட பலர் நடிக்கின்றனர். ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் வசனத்தை ஆனந்த் எழுதியுள்ளார் .
ஶ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பய் கவனிக்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். அதை கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை. முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது.
இந்நிலையில் சரத்குமாரின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.இதை இரட்டைவேடங்களில் மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார் காட்சியளிக்கிறார்.