வருவான் ‘பேய்’ மாதிரி…. மிரட்ட வரும் ‘ராயன்’!!

நடிகர் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது.இப்படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம்  வரும் ஜூலை 26ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. “,ராயா காட்டில் ஆபத்தான மிருகம் எது? என செல்வராகவன் தனுஷை பார்த்து கேட்பது போல இப்படத்தின்  டிரெய்லர் தொடங்குகிறது. அதற்கு ‘சிங்கம்’ தான் என ராயன் சொல்ல,  இல்லை. ‘சிங்கம்’ வலிமையான மிருகம். ஆனால், ஆபத்தான மிருகம் ‘ஓநாய்’ தான். அது ஸ்கெட்ச் போட்டு சிங்கத்தையே சாகடிச்சிடும் என்கிறார். அடுத்த காட்சியில்,எஸ்.ஜே. சூர்யா, ‘அவன் ஆம்பளையா இருந்தா இங்க வந்து போட சொல்லு’ என சொல்ல, ‘பேய் மாறி வருவான்’ என இடம் பெறும் வசனமும், டிரெய்லர் இறுதியில் காவல் நிலையத்தில் தனுஷிடம் இன்ஸ்பெக்டர்,” என்ன சொன்ன வாபஸ் வாங்கிட்டானுங்க’ என கேட்டதும்,  தனுஷ் தனது முகத் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்,    “கெஞ்சிக் கேட்டேன்” என  சொல்லும் காட்சியும் இடம்  பெற்றுள்ளது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.