இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ‘பராரி’ படக்குழுவினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ’ஜோக்கர்’, ‘குக்கூ’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜு முருகனிடம் உதவியாளராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார்.