‘லால்சலாம்’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்,அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோ நடித்துள்ளனர் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.இதில் சத்யராஜ் மிக முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகரும் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ சவ்பின் சாஹிர் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக இவரது கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க இருந்தார் என்றும், அவருக்கு பதிலாக தான் தற்போது சவ்பின் சாஹிர் இணைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.