இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீட்புப் படையினருடன் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கிய மக்களுக்கு உதவி வருகின்றனர். கூடுதலாக, மலையாள நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். மம்முட்டி, மோகன் லால், பிரித்திவிராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நிவாரணப் பணிகளுக்கு ரசிகர்கள் அமைப்பு மூலம் உதவி வருகின்றனர். சூர்யா, விக்ரம், கமல் உள்ளிட்ட பல கோலிவுட் திரை பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.இதற்கிடையே நடிகர் மோகன்லால் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ராணுவ உடையில் அவர் மீட்பு பணிகளை பார்வையிட்டார். ராணுவ வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 2009ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு ராணுவ சீருடையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது