ஸ்ரீஹரி கதாநாயகனாக நடிக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

டி.டி.சினிமா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள புதிய படம்,”சூரியனும் சூரியகாந்தியும்”!.இப்படத்தில் ஶ்ரீஹரி கதாநாயகனாகவும், அப்புக்குட்டி, ஏ.எல்.ராஜா, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக  நடிக்க, இவர்களுடன்  சந்தான பாரதி, செந்தில் நாதன், மங்களநாத குருக்கள், சச்சின், ராஜசிம்மன், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, வர்ஷா, ரேவதி, ரிந்து ரவி  உள்பட பலர் நடித்துள்ளனர் இப்படத்தின்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.இப்படம் குறித்து இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறுகையில்,”சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது.  என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை திருவாரூர் ராஜா, கவனிக்க, ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைத்துள்ளார்.  டெய்லி குருஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை வரும் ஆகஸ்ட் 9’ம் தேதி வெளியிடுகிறது.