கோட் பட டிரைலர் …ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிபில் வேன்கள் பிரானு இயக்கி வந்த ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி  வெளியாகவுள்ள  நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள்  மும்முரமாக நடந்து வருகிறது.இப்படத்தில் விஜய்யுடன் , மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில்  இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில்,  நேற்று மாலை ‘அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில்,”இன்று டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தேன். ஆனால் சிறந்த வெர்ஷனை உருவாக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு இந்த சின்ன ட்ரீட், விரைவில் தளபதியை திரையில் காண்போம்”என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்