கதையின் நாயகனாக உயர்ந்துள்ளநடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கி பலரையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.