பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை “சுப்ரமண்யா” படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறக்கியுள்ளார். இப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர்.இந்நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தை பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதை காணலாம். போஸ்டரின் கலைவடிவமைப்பு பசுமையாகவும், சிக்கலான அமைப்புகளாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது . இப்படத்தின் பணிகள் தற்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது ,இதன் விஎப் எக்ஸ்,சிஜிஐ பணிகள் சென்னை,மும்பையில் உள்ள பிரபல ஸ்டுடியோக்களில் நடந்து வருகின்றன.இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.