விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், சினிமாவில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது எனக் கூறி அதிலிருந்து வெளியேறி விட்டார் இதையடுத்து இந்த நிகழ்ச்சியை சிம்பு அல்லது விஜய் சேதுபதி நடத்தலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,சிம்பு தக் லைப் படத்தில் மும்முரமாக பிக்பாஸுக்கு நோ சொல்லி விட்டார். இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனுக்கான புதிய லோகோவுடன் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ஐ வில் பி வாட்சிங் என கம்பீரமாக கர்ஜித்த கமல் இடத்தை ஓரளவுக்காவது விஜய் சேதுபதி நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.