தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகராக வலம் வரும் விஜய், தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால், நடிகர் விஜய் நடிப்பிற்கு முழுக்கு போட உள்ளார். இதையடுத்து சமீபத்தில் வெளியான கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை அப்படத்தை தயாரிக்கும் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது இந்நிறுவனம்
தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ‘One Last Time’ என்ற கேப்ஷனுடன் ரசிகர்கள், பொதுமக்கள் விஜய்யை பற்றி பேசும் காட்சிகளும், இதுவரையிலான அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புகள் ஆகியவை அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளது மட்டுமே தற்போது வரை ஆகியுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு அல்லது படத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் குறித்த விபரங்களை நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.