நடிகர் தனுஷ் தனது 4 வது படமாக நடித்து இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் மற்றும் அசோக் செல்வன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,இதில் தனுஷ் – நித்யா மேனன் ஜோடி ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் மூலம் தனுசுடன் முதல் முறையாக இணைந்துள்ள நடிகர் அருண் விஜய், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில்,,தனுசுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேபோல்,இப்படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகர் அசோக் செல்வன், தனுஷின் சகோதரராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனி அருகே நடந்தது வரும் நிலையில்,அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட உள்ளதாம். இங்கு அருண் விஜய் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இப்படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட படமாக உருவாக்கி வருகிறது என்கிறது படக்குழு.