போலீசிலும் புகார் அளித்துள்ளார்
இந்நிலையில் ஜெயம் ரவி விவகாரம் குறித்து பாடகி கெனிஷாகூறியுள்ளதாவது,”ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் உறவு உண்மைதான். ஆனால் அந்து நட்பு ரீதியானதாகவும், தொழில்முறையாகவும் இருக்கிறது. அவர் எனது வாடிக்கையாளர் அவ்வளவுதான். அவர்களது விவாகரத்துக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது முழுக்க முழுக்க பொய் என்பதை இங்கே நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.இது உங்கள் வீட்டு பிரச்னை இல்லை. இது வேறு ஒருவரது குடும்ப பிரச்னை. அதிலிருந்து விலகியே இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். அதற்கு நேரம் இல்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆர்த்திக்கு ரவி நோட்டீஸ் அனுப்பும்வரைக்குமே இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது” என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்