நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண முறிவு, அதை தொடர்ந்து மயோசிடிஸ் நோய் தாக்கம் இவற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நடிகை சமந்தா நடிப்பின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மலையாள சினிமாவிலும் கால் பதித்துள்ள சமந்தா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களையம் தனது வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது லண்டன் கலாச்சாரத்தில் சமந்தா புதிய கான்செப்டில் போட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார். ‘பார்பி’ பொம்மையாக சமந்தா க்யூட் கெட்டப்பில் தோன்றும் இந்த புகைப்படங்கள் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது. துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை தட்டி விட்டுள்ளனர். இவரது லுக் மற்றும் அழகை பார்த்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவரை சினிமாவில் அசைக்க முடியாது என்றும், . கிங் இல்லாவிட்டாலும் சமந்தா எப்போதும் குயின்தான் என்றும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.