நடிகர் அஜித்குமார் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்புகளுக்கு வெளிநாடு செல்லும் போது, படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட பைக் மற்றும் கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் அஜித், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போது, அதிநவீன சொகுசு காரில் 234 கி.மீ வேகத்தில் சென்று அதனை வீடியோவாக வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார். மேலும் இந்தியாவில் ‘பைலட்’ லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜித். சில வருடங்களுக்கு முன்பு அஜித், அண்ணா பல்கலைகழகம் வானூர்தி துறை மாணவர்களுடன் இணைந்து நடத்திய ’தக்ஷா’ என்ற ட்ரோன் தயாரிப்பு நிகழ்வில் ஈடுபட்டார்.அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு துபாய் ஏர்டோம் என்ற கார் ரேஸில் 220 கி.மீ வேகத்தில் அஜித்குமார் கார் ஒட்டிய வீடியோவை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்து இருந்தார். இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “துபாய் ஆட்டோட்ரோமில் அஜித்குமார் ஃபெராரி 488 ஈவிஓ காரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அஜித், ஐரோப்பா கார் பந்தய சீசனுக்கு தயாராகி வருகிறார்” என பதிவிட்டுள்ளார். மேலும் சுரேஷ் சந்திராவின் மற்றொரு பதிவில், “அஜித்குமார் ரேஸிங் அணி உருவாக்கியுள்ளதை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம். புதிதாக உருவாக்காப்பட்டுள்ள பந்தய அணிக்கு ஃபேபியன் என்பவர் கார் ஓட்டுநராக இருப்பார். புதிய ரேஸிங் அணி ஐரோப்பிய தொடரில் பங்கேற்கும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் ரேஸ் பைக் பின்னணியில் புதிய செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.