உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 1997 ஆம் ஆண்டு ’மருதநாயகம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி வந்த நிலையில். சில காரணங்களினால் இப்படம் அப்படியே கிடப்பில் போட பட்டயது.இதில் மருதநாயகம் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்க இவருடன் விஷ்ணுவர்தன், சத்யராஜ், அம்ரிஷ் புரி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்து வந்தனர். கடந்த . 27 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் 30 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், படத்தின் காட்சிகள் அனைத்தும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில்; ’மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்கினால், கமல்ஹாசனின் மருத நாயகம் கதாபாத்திரத்தை ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே அவர் அமெரிக்கா சென்று ‘ஏஐ’ டெக்னாலஜி படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.