ரஜினிகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு! – மருத்துவ மனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து  , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு 10 மணியளவில்  திடீரென அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம்  விளக்கு  பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அவருக்கு முதல் கட்டமாக இசிஜி, எக்கோ, ஸ்கேன்  பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று   காலை அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் நடத்தப்பட்டதாக  கூறப்படுகிறது.

இதுகுறித்து, மருத்துவமனை தரப்பில் விசாரித்த போது அவரது கிட்னி பகுதியில் சதை வளர்ந்திருப்பதாகவும், அது சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள்  வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தேவை பட்டால் அவருக்கு அதிநவீன அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட உள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி மருத்துவரின் ஆலோசனைபடிதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், திடீரென அனுமதிக்கப்படவில்லை என்றும் ரஜினி குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வேட்டையன் திரைப்படம் இம்மாதம்  10ம் தேதி வெளியாகவுள்ளநிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.