‘தங்கலான்’ படத்தை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் தற்போது, தெலுங்கில் பிரபாசுடன் ‘தி ராஜா சாப்’, தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப் படத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சர்தார் 2 படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா மோகனன், சண்டை காட்சியில் நடித்து வருவதாக உடல் முழுவதும் பெல்ட்களை கட்டி இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,”சர்தார் 2 க்கு மிகவும் சவாலான சில ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினோம், எங்கள் உடையில் நாங்கள் அணியும் பாதுகாப்பு கவசம் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்ட வேண்டும் என நினைத்தேன்.இவை நாம் உயரத்தில் இருந்து குதித்து காற்றில் மிதக்கும் போது , கால்களை உதைத்து நடிக்கும் காட்சிகளிலும், கயிற்றில் நம்மைப் பிடித்துக் கொள்ள வேண்டும். முதல் சில நேரங்களில் கயிறு வேலை மிகவும் கடினமாகவும் இருந்தது.
தங்கலானில் சில காட்சிகளுக்கு அதைச் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் இப்போது பயிற்சியின் மூலம், சில காட்சிகள் எனக்கு நரம்பு சிதைவை ஏற்படுத்தினாலும் (சமீபத்தில் நான் 100 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டியிருந்தது, அது அவ்வளவு வேடிக்கையாக இல்லை) எனக்கு புதிய அனுபவம் கிடைத்தது” என்கிறார்.இப்படத்தில் கார்த்தி ஏஜென்ட் சந்திரபோஸ் சர்தார் மற்றும் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கிறார்கள்