‘லீக்’கான  வீடியோ? நடிகை ஓவியா பதில் !

 

‘களவாணி’ படத்தின் மூலம் கதாநாயகியாக   அறிமுகமானவர் ஓவியா.அதனையடுத்து சிவகார்த்திகேயனின்  மெரீனா, மற்றும் மூடர் கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவருக்கு சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தமிழ்நாத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரபலம் ஆனார்.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் பிறமொழிபடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி  வருவதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் ஓவியாவை டேக் செய்து இந்த வீடியோ பற்றி கேட்டு வந்தனர். இது உண்மையான வீடியோவா? வீடியோவில் இருப்பது நீங்கள் தானா? போன்ற பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்   இந்த கேள்விகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் அவர்களது பாணியிலேயே ஓவியா பதிலடி கொடுத்து வருகிறார். . இன்ஸ்டாகிராமில் ஒரு பயனர், “உங்களின் 17 வினாடி வீடியோ லீக் ஆனது மேடம்” என்று கருத்து தெரிவிக்க, அதற்கு ஓவியா “என்ஜாய்” என்று பதிலளித்துள்ளார். இன்னொருவர் “வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஓவியா, ‘அடுத்த முறை ப்ரோ’ என கூலாக  கூறியுள்ளார் .