‘கமல்ஹாசன் 237’; புதிய தோற்றம் வெளியானது!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பையும் கமல் நிறைவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது..இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 237 படத்தில் நடிக்கவுள்ளார்.இப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கமல்ஹாசனின் புதிய லுக்கை அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் புதிய லுக்கில் புதிய பயணம் என்றும் பயணம் ஆரம்பம் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளது.