விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, நிக் ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நாகபந்தம், படத்தினை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மெகாஸ்டார் சிரஞ்சீவி ‘முஹூர்த்தம்’ காட்சிக்கு கிளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தார். கேமராவை தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் இயக்க, முதல் ஷாட்டை அஜய் பூபதி இயக்கினார். ஏசியன் சுனில் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். . இப்படத்தில் பெத்த கபு ஆக்சன் படத்தின் மூலம் தன் திறமையை நிருபித்த விராட் கர்ணா நாயகனாக நடிக்கிறார். நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.இவர்களுடன் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவாளராகவும், அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் அபிஷேக் நாமா.. கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் திறக்கப்பட்டதை அடுத்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன பண்டாரத்தை அடுத்து, மறைந்துள்ள பொக்கிஷங்கள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்கள் நாகபந்தம் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச் சுற்றி வருகிறது. என்கிறார் இயக்குனர் அபிஷேக் நாமா.