இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள் வழக்கமான mystery-crime thriller ஆக இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான visual effects அம்சங்களுடன், ககன மார்கன் விறுவிறுப்பான detective story ஆக இருக்கும்.
Underwater Sequences இந்த படத்தில் முக்கிய அம்சம் வகிப்பதால், படத்தின் பல முக்கிய காட்சிகள் பல நாட்களாக மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த படத்தில் பிரம்மிக்கத்தக்க VFX இடம் பெறுகின்றன.
ககன மார்கன் குடும்பமாக வந்து பார்த்து மகிழக் கூடிய படமாக இருக்கும்.
விஜய் ஆண்டனி அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள் மற்றும் தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.