. இது அவரது கவர்ச்சிக்கும், நட்சத்திர சக்திக்கும் ஒப்பிட முடியாத அளவில் இருக்கிறது. அதே தருணத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.
அவர் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை தொடர்ந்து காண்போம்.’சலார் 2′ : இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார்.
The Raja Saab: இந்த திரைப்படம் – இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கல்கி 2 : ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ,தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.