அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பற்றி 2 தகவல்கள் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நான் முதலில் மேஜர் சரவணனாக இருக்கும் எண்ணினேன். இருந்தாலும் யாருன்னு என் நண்பரிடம் கேட்டேன். பின்னர் நீண்ட யோசனைக்குப் பின் மேஜர் முகுந்த் வரதராஜனா? என நானே திரும்ப கேட்டேன். அவர் சரியாக சொல்லிட்டிங்க என பதிலளித்தார். நான் டிவியில் மேஜர் முகுந்த் மரணம் பற்றியும், வாழ்க்கை வரலாறு பற்றியும் பார்த்தேன்.
மேலும் மேஜர் முகுந்தின் இறுதிச்சடங்கில் அவரின் மகள் செய்த விஷயம் யாராலும் மறக்க முடியாது. நான் அந்த புத்தகத்தை படித்தேன். சோனி நிறுவனம் இதில் ஒரு சாப்டரை படமாக்க இருப்பதாக சொன்னார்கள்.
ஆனால் நான் ஏற்கனவே கமிட்டான படம் பற்றி என் நண்பரிடம் சொன்னேன். மேலும் புத்தகம் மட்டும் வைத்து படம் பண்ண முடியாது என்பதால் தகவல்கள் வேண்டும் என நினைத்தேன். பின்னர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனிடம் பேசினேன். அதன் பிறகு சிலரிடம் பேசி காஷ்மீரில் அவரின் 2 ஆபரேஷன்கள் பற்றி கேட்டறிந்தேன். முகுந்த் குடும்பத்தினரிடம் பேசிய போது வேறு வித தகவல்கள் கிடைத்தது. ஆனால் இவை எதுவும் திரைக்கதையாக வரவில்லை. இதை அனைத்தையும் பேப்பரில் எழுதி வைத்தேன்.
பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த மேஜர் முகுந்தின் மனைவியை சந்தித்தேன். அந்த சந்திப்பு 6,7 மணி நேரம் சென்றது. அப்போது தான் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு ஆன்மா உள்ளது தெரிந்தது. இது தான் அமரன் படத்தின் கதை உருவாக காரணம் அமைந்தது” என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.