ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கருக்களை 250-சொற்களில் சுருக்கமாக சமர்ப்பிக்கலாம். பார்வையாளர்கள் இந்த கதைக்கருக்களை படித்து மதிப்பிடலாம், அதிக ரேட்டிங் பெற்ற கதைகள் மேலே உயரும். இதன் பின்னூட்ட அமைப்பு, கருத்துக்களுக்குப் பதிலாக மதிப்பீடுகளில் கவனம் செலுத்துகிறது, எழுத்தாளர்கள் நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களின் கருத்துக்களுக்கு நேர்மறையான ஆதரவைப் பெறவும் உதவும் ஒரு ஆக்கபூர்வமான சூழலை இந்த தளம் உருவாக்குகிறது.
“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் ” இணையதளத்தை துவக்கத்தை கொண்டாடும் விதமாக எழுத்தாளர்களுக்கு, உங்களுக்குப் பிடித்த ஹீரோவை சூப்பர் பவருடன் கற்பனை செய்து கதை சொல்லுங்கள் !” என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும் திறன்களைக் கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவை மறுவடிவமைக்கும் இந்த கதைக்கரு அதிகபட்ச 3,500-வார்த்தைகள் கொண்டதாக சமர்ப்பிக்க, எழுத்தாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். இறுதியில், இந்த போட்டியில் ரசிகர்களின் ஆதரவை அதிகமாக பெறும் வெற்றியாளர் உதவி எழுத்தாளராக அல்லது உதவி இயக்குநராக ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார். இது வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும். தல்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பளபதி ஆகியோரால் நிறுவப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளம், புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்காகவும், எழுத்தாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குவகிறது.
பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளதாவது.., “இந்த மேடையில் உங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், உலகை ஊக்குவிக்க சிறப்பான வழியாக இதைப் பயன்படுத்திகொள்ளுங்கள், எழுத்தாளர்களின் வார்த்தைகளை மற்றும் பார்வையாளர்கள் தங்கள் விருப்பத்தின் மூலம் மேம்படுத்துவார்கள். இந்த தளத்தில் அனைவரும் இணையுங்கள். #TheScriptCraft குழுவிற்கு வாழ்த்துகள்! https://www.thescriptcraft.com/