சென்னையில் புஷ்பா 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது ‘வைல்ட் ஃபயர்’ என்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ’கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ராஷ்மிகா பேசும் போது, “ஹாய் நண்பா… நல்லா இருக்கீங்களா? பாடல்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்ததா? உண்மையாகச் சொல்கிறேன்.. என்னுடைய வாழ்க்கை புஷ்பாவிற்கு முன், புஷ்பாவிற்கு பின் என்றாகி விட்டது. இப்போது எனக்கு மிஸ்ஸிங் ஃபீல் வந்து விட்டது. என்னுடைய வாழ்க்கை புஷ்பா திரைப்படத்திற்கு சமம் என்று சொல்வேன். அல்லு அர்ஜூன் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் என்றவரிடம் .நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் “உங்கள் காதலன் எப்படி இருக்க வேண்டும்” என்று கேட்ட போது, ‘அவர் கொஞ்சம் கோபக்காரகாகவும் இருக்க வேண்டும், அன்பாளராக இருக்க வேண்டும்’. அவர் பணக்காரராகவோ, பெரிய அளவில் அழகாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மனது மட்டும் பிடித்து இருந்தால் போதும்”. திருமணம் மற்றும் காதலர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ” நான் கல்யாணம் செய்து கொள்ளும் நபர் குறித்து எல்லோருக்கும் தெரியும். புஷ்பா 2 திரைப்படம் வந்த உடன் அதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்” என்று பேசினார். ‘நேஷனல் க்ரஷ்’ எனரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவர கொண்டாவிடம் செய்தியாளர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்புகையில், “நான் 35 வயது வரை எப்படி சிங்கிளாக இருக்க முடியும் என பதிலளித்து தான் ‘ரிலேஷன்ஷிப்’பில் இருப்பதை சூசகமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.