நடிகர் தனுஷ் தற்போது நடிப்பில் மட்டுமில்லாமல், இயக்கத்திலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘ராயன்’ படத்தை தொடர்ந்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.மேலும் தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ குபேரா ‘படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.இப்படத்தில் தனுசுடன் . நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.