இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள R.K.வித்யாதரன் கூறியதாவது…
“இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்கிறோம்.
மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் principal ஆக பாக்ஸும் சாம்சும் நடித்திருக்கிறார்கள்.
அந்த மூன்று பாடல்களும் அருமையாக வந்துள்ளது. விடுதலை 2 படத்திற்கு பிறகு அவர் இசையமையத்திற்கும் படம் இது என்பதால் பாடல்கள் நிச்சயம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
கன்னட திரை உலகில் உபேந்திரா வைத்து கனவில் நடக்கும் சம்பவங்களை Thriller-ஆக ” News ” திரைப்படத்திலும், வைத்தீஸ்வரன் திரைப்படத்தில் மறுஜன்மத்தை பற்றி ஆராயும் விதமாக சொல்லியது போல் இந்தப் படத்தில் சமூக நம்பிக்கைகளையும் ஆவிகள் உலகத்தில் நடக்கும் மன மாற்றங்களை பற்றி சொல்லவிருக்கிறார் இயக்குனர் R.K. வித்யாதரன்.