விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், “ இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார். நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன்.
பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர் சக்தி நாய்களை பற்றி படம் பண்ணவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். நிச்சயம் அதில் பெரிய கருணை இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு படம் உருவாக்கப்பட்டு அதில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து இங்கு வந்து இன்று நம்முன் இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஆடி தங்கள் திறமைகளை காட்டிய இந்த மனிதர்களுக்கு சின்னதா கை தட்டி வாழ்த்தினாலே போதும். அதுவே அவர்களுக்கான அங்கீகாரம்.சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல, அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போல தான் சினிமாவும். 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்களை உருவாக்கும் போது அப்படத்தின் இயக்குனர் இறப்பின் விளிம்பிற்கு செல்கிறான். படம் நல்லா இல்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து :
கதாநாயகன் குணாநிதியும் இயக்குனர் சக்திவேலும் என் நண்பர்கள். மேலும், நான் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களிடம் உதவி இயக்குனாரக பணியாற்ற குணாநிதிதான் காரணம். இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியது போல் உண்மையும், நேர்மையும் படத்தில் இருந்தால் படம் வெற்றிப்பெறும் என கூறினார். நான் படத்தை பார்த்தேன் இதில் உண்மை, நேர்மை தாண்டி ஒரு உயிரோட்டமும் உள்ளது. உங்களுக்கான நம்பிக்கையாக நான் முன் இருக்கிறேன். ஏனென்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல் வெற்றிக்காக நான் காத்திருந்தபோது இதே பத்திரிக்கையாளர்களும், மக்களும் ஆதரவளித்தார்கள். அதேபோல் இத்திரைப்படத்திற்கும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திரைப்படம் நல்ல திரைப்படம் என்பதை தாண்டி சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கும் . மேலும் அம்மாவாக நடித்த நடிகை ஸ்ரீரேகா மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். பின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்’க்கு தன் பாராட்டை தெரிவித்து விடைப்பெற்றார்.
தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி :
அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினராக வந்திருக்ககூடிய இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் அருன் விஷ்வா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கும் மற்றும் அலங்கு திரைப்படத்தின் அனைத்து குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படதில் முதுகெலும்பாக செயல்பட்டது எனது இணை தயாரிப்பாளர் சபரிஷ் அவர்கள். மேலும் என்னை ஊக்கப்படுத்தி என்னை நன்றாக கவனித்துக் கொண்ட என் கணவர் சங்கர் பாலாஜி மற்றும் என் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள். இத்திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அச்சானியாக செயல்ப்படுவது சக்தி பிலிம் பேக்டரி திரு . சக்திவேலன் அவர்கள். இவர் இத்திரைப்படத்தின் விநியோகிஸ்தரராக வந்ததும் எங்களுக்குள் ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என மேலும் நம்பிக்கை வந்துள்ளது.
”அலங்கு” என்றால் ராஜ ராஜ சோழன் காலத்தில் போர்க்களத்தில் உபயோகிக்கக் கூடிய நாய்களாகும். அப்பெயரை படத்தின் தலைப்பாக தேர்வு செய்த இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு நன்றி. மேலும் ”அலங்கு” என்ற பெயர் அனவருக்கும் ஈர்க்கக் கூடிய பெயராக இருப்பது நெகிழ்வாக உள்ளது. எங்கள் குழுவிற்குள் ஏதேனும் கசப்பான சூழ்நிலை வந்தாலும் அந்த நொடியே அதை தூக்கி எறிந்துவிட்டு படத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டோம். இப்படிப்பட்ட குழுவோடு இணைந்து பணியாற்றியது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று வெளியாகிறது. திரையரங்கில் வந்து படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் குணாநிதி :
அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினருக்கும் படக்குழுவிற்கும் நன்றி மற்றும் இந்த மேடையில் நானும் ஒரு நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்தவர் திரு. கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கும் எனது நன்றி. ஒரு புதுமுக நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்தார் என்றென்றும் அவருக்கும் இயக்குனர் சக்திவேலும் கதை சொன்னார். கதை கேட்டவுடன் வியப்பில் இருந்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இக்கதையை தங்கை சங்கமித்ரா, தம்பி சபரேஷிடமும் கூறினேன் அவர்களும் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனால் இதற்க்கான பொருட் செலவையும் இதில் இருக்கும் சவாலையும் யோசித்துக்கொண்டிருந்தோம். இத்திரைப்படம் ஒரு மேஜிக்காக அமைந்தது ஏனென்றால் இத்திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி திரு சக்திவேலன் உலகமெங்கும் வெளியிட தானாக முன் வந்தார், மற்றுமொரு வியப்பாக கூடிய விஷயம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் ஆசி பெற்று படத்தின் டிரெய்லரை காண்பித்தோம் பின் பார்த்ததும் நிச்சயம் வெற்றி என கூறினார் அதுவே ”அலங்கு”க்கு பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம்.
நான் தெருக்கூத்து , நாடகம், குறும்படம், துணை நடிகராக நடித்து இன்று கதை நாயகனாக வந்துள்ளேன். எங்களை ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் எங்களை வழிநடத்திய ஐயா திரு. ராமதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தயாரிப்பாளர் சங்கமித்ரா செளமியா அன்புமணி, தயாரிப்பாளர் சபரிஷ் என் பெற்றோர்கள் , என் மனைவி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு மருத்துவராக அறுவை சிகிச்சையில் இருக்கும்போது இல்லாத ஒரு பதட்டம் இந்த மேடையில் ஏற்படுகிறது மேலும் டிசம்பர் 27 அன்று படம் வெளியாகிறது படத்தை மக்களிடையே மிகப்பெரிய வெற்றியடைய பத்திரிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.