நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. .முன்னதாக ‘குட் பேட் அக்லி’ படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் படப்பிடிப்பு முடிவடையாததால் , விடா முயற்சி முந்தி கொண்டது. இந்நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்துவிட்டதாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் ஆதிக் ரவிச்சந்திரன், “வாழ்நாளில் எனக்கு மறக்க முடியாத ஒரு வாய்ப்பை அஜீத் அவர்கள் கொடுத்துள்ளார். எனது கனவு நினைவாகிவிட்டது. அவருடைய அன்புக்கு ரொம்ப நன்றி. இன்று கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது; இது மிகவும் அழகான பயணம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அஜித்,தீனாமற்றும் அமர்க்களம் படங்களில் இருந்ததைப்போல் மிகவும் இளமையான தோற்றத்தில் உடல் எடை கணிசமாக குறைந்து காணப்படுகிறார். அஜித்தின் இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என தெரிகிறது.