டி.ஆர் பிக்சர்ஸ்’ சத்யவதி அன்பழகன், தனுஷ் ராஜ்குமார் ஆகியோரது தயாரிப்பில், தனுஷ் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி, அபிநயா, வினோத் சாகர் ,இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான பழக்கருப்பையா, சரண்ராஜ், கூல் சுரேஷ் , இயக்குனர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இளையராஜா கவனிக்க, ஜுபின் இசையமைத்து வருகிறார்.