நடிகர் ஜெயம் ரவி,மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். .இம் மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.இதில் சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இவ்வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.