விவாகரத்து வழக்கு: ஜெயம்ரவி-ஆர்த்தி மனம் விட்டு பேச நீதிபதி அறிவுறுத்தல்!
நடிகர் ஜெயம் ரவி, கடந்த 2009ஆம் ஆண்டுஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் திடீரென ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டவர் கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது , இதையடுத்து
நடிகர் ஜெயம் ரவி,மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். .இம் மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.இதில் சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் இவ்வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.