‘ராயன்’ படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில்உருவாக்கி வந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.இப்படத்தில் தனுஷ் தனது அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக களமிறக் கியுள்ளார். அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ தாமஸ், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் காதலை மையமாகக் கொண்டு முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்டு கதைக்களத்தை தனுஷ் உருவாக்கியுள்ளார்.
.ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த 2 பாடல்கள் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘யேடி’ என்று தொடங்கும் இந்த பாடல் சூப்பர் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை ஜோனிதா காந்தியுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ளார். அனிமேஷனை மையமாகக் கொண்டு இந்த பாடல் ‘லிரிக்’ வீடியோவாக வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில், பாடல் காட்சியில் கதாநாயகன் பவீஷ்க்கு , அனிகா சுரேந்திரனுடன் எப்படி ரொமான்ஸ் செய்யவேண்டும் என தனுஷ் கற்றுக் கொடுக்கும் காட்சிகளும், அனிகா சுரேந்திரனை எப்படி தூக்கிச் சுற்றவேண்டும் எனச் சொல்லித்தரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டின் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் பாடல்களாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பாடல்கள் வெளியான நிலையில் தற்போது, தனுஷ் தனது அக்கா மகனுக்காக பாடிய இந்த பாடலும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது.