இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான், பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,இயக்குநர் பாலா யூ டியூப் சேனல் ஒன்றில் நடிகர் விஜய் பற்றி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அது இது தான்,”ஒரு திரைப்பட விழாவில் விஜய்யை பார்த்து நான் எழுந்திருக்கவில்லை என்றும், விஜய்யை பாலாவிற்கு பிடிக்காது, அதனால் தான் பாலா வேண்டும் என்றே அப்படி அமர்ந்து இருந்தார் என்றும் பலவிதமான செய்திகள் பரப்பப்பட்டன. அது உண்மை இல்லை, அது செய்தியாக்கப்பட்டது, அது என்னை அறியாமல் நடந்த விஷயம். அப்படியே இருந்தாலும், நான் ஏன் அவரைப் பார்த்து எழுந்திருக்க வேண்டும், விஜய் என்னை விட எத்தனையோ வயது சிறியவர். எப்படி இருக்கும்போது நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். ஒரு வேலை நான் அன்று எழுந்து நிற்காமல் இருந்தது கவனக்குறைவால் நடந்து இருக்கலாமே தவிர, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக கால் மீது கால் போட்டு கொண்டு அமர்ந்திருக்கவில்லை.எனக்கு பிடித்தமான நடிகர்களில் விஜய்யும் ஒருவர், ஒருமுறை நானும் எனது குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் சென்ற போது, விஜய் அங்கு இருந்தார். அப்போது என் மகள் அவருடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்த விஜய், என்னிடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டார். அப்படி ஒரு டிசிப்ளினான ஒருவரை நான் எப்படி அவமானப்படுத்துவேன். பல இடத்தில் பலவிதமான கருத்துக்கள் என்னை பற்றி வருகின்றன அவற்றுக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும், அப்படி இருக்கும்போது இணையத்தில் பரவும் செய்திக்காவும், விமர்சனத்திற்காகவும் நான் பதில் கொடுத்துக் கொண்டே இருந்தால் என் வேலையை நான் சரியாக செய்ய முடியாது இவ்வாறு அவர் கூறியுள்ளார்