ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் S.V தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ள இப்படத்தை சூரியன்.ஜி இயக்கியுள்ளார்.ராஜீவ் கோவிந்த் மற்றும் அபிஷேக் ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
வில்லனாக ஹரிஷ் பெர்டி, நடிக்க அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ… என்ற மனதை வருடும் பாடலும்
மிளிரும் பின்னாலி சுழலும் விழிகாரி…எனும் துள்ளலிசை பாடலும் இடம்பெற்றுள்ளது.
இதன் படப்பிடிப்பு குடகு மலை,கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது.
நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரியில் வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.