இப்படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடா முயற்சி திரைப்படம் இம்மாதம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.விமான நிலையத்தில் குடும்பத்துடன் அஜித் வந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.