உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்றை குறிப்பிட்டு, தனது ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.” புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.முன்னதாக இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ரசிகர்களும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்