தொலைக்காட்சி தொடராக வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்ற ரோஜா வெப் தொடரின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில், ரோஜா முதல்பாகத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா ,2 ம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நியாஸ் இதில் நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், ஹரிப்ரியா, இஸ்மத்பானு, கம்பம் மீனா, ‘சில்மிஷம்’ சிவா. ஸ்வேதா, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலியா, தீபா உள்பட பலர் நடித்துள்ளனர் இந்த வெப் தொடரை இயக்குனர் மிஸ்கின் உதவியாளரும், ‘கள்ளப்படம்’ படத்தின் இயக்குனருமான வடிவேல் இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரும் , ஒளிப்பதிவாளருமான ஸ்ரீராம் சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை பாணாக் காற்றாடி., ஆம்பள,’ படங்களுக்கு. வசனம் எழுதிய ஜி .ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார் .
.யூடியூப் சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் நாயகன் மதிகாதல் முயற்சியில் ஈடுபட்டு 17 பெண்களை காதலித்து பின்பு காதல் தோல்வி அடைந்த விரக்தியின் விளிம்பில் இருக்கிறான் அப்போது ரோஜா மகள் மலர்மதி வேலை செய்யும் சேனலில் எம்.டி.யாக பதவி ஏற்கிறாள். எதிர்பாராதவிதமாக மலர் மதிக்கு காதல் ஒப்பந்தம் போட்டு தன்னை இம்ப்ரஸ் செய்தால் கல்யாணம் செய்கிறேன் என்று சவால் விடுகிறாள். இதை மதி ஏற்று மலர் மீது காதல் முயற்சியில் இறங்குகிறான்.மதியின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே இதன் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது .