நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை!

நடிகர்பிரபு கடந்த ஆண்டு பிப்­ர­வரி (20 –ஆம் தேதி) இரவு சிறுநீ­ரகப் பிரச்­சினை கார­ண­மாக
சென்னை, கோடம்­பாக்­கத்தில் உள்ளமெட்வே மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்பட்­டா ர். அவ­ருக்கு சிறுநீரகத்­தில் கல் அடைப்புஇருந்­தது கண்­ட­றியப்­பட்டு,யூரித்ரோஸ்கோப்பி லேசர்
அறுவை சிகிச்சை மூலம் சிறு­ நீரகக் கற்­கள் அகற்­றப்­பட்டு வீடு திரும்பி­னார்.இந்நி­லை­யில், நடிகர் பிரபு காய்ச்­சல் மற்­றும் தலைவலி அறிகுறிகளு­டன் கடந்த 3 ம் தேதி , மெட்வேமருத்­து­வ­ம­னை­யில் அனும-திக்­கப்­பட்­டார்.

அவருக்கு  மருத்­து­வர்­கள் பரி­சோ­தனை செய்­த­தில், மூளையின் பெரும்­ப­குதிக்கு ரத்தத்தைவழங்கும் ஒரு பெரிய இரத்த நாளமான நடுத்­தர  பெருமூளைதமனியின் பிள-வுகளில் உள் கரோ­டிட் தமனியின் மேற்­பு­றத்­தில் வீக்­கம் இருப்­பது
சோத­னை­யில் தெரிய­வந் தது.அதைத்தொடர்ந்து , நடிகர் பிரபு­வுக்கு மூளை அனீரிசிம் அறுவை சிகிச்சை
செய்­யப்­பட்­டது. தற்­போது,அவ­ரின் உடல்நிலை சீராக இருப்­ப­தா­க தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று மாலை நடிகர் பிரபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது