அஜித்தை ‘சைட்’ அடித்த ஷாலினி! வைரலாகும் வீடியோ!!

துபாயில் நடந்த  24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ‘டீம்’ கலந்துக் கொண்ட நிலையில், நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் தனது அணியில் போட்டியிடவில்லை என விலகினாலும், அணியின் உரிமையாளராக தொடர்ந்தார். ஆஸ்திரிய அணியில் சேர்ந்துக் கொண்டு கார் ஓட்டியும் அசத்தினார். இதில், நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் 3 வது இடத்தை பிடித்து பதக்கத்தை வென்றது.வெற்றிவாகை சூடிய உற்சாகத்தில் தனது குடும்பத்தை பார்த்த நடிகர் அஜித் குமார் தனது அன்பை வெளிப்படுத்திய விதமும் தனது கணவர் நினைத்ததை முடித்துவிட்டாரே என அவரை கட்டியணைத்து வாழ்த்தி, யாருக்கும் தெரியாமல் மகிழ்ச்சியில் திளைத்த அஜித்தை ரசித்து ஷாலினி சைட் அடித்துப் பார்க்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், யுவன்ஷங்கர்ராஜா,வெங்கட்பிரபு,நாக சைதன்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்