நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி கூட்டணியில், பான் இந்திய திரைப்படமாக உருவாகும் புதிய படம்,’ நாக பந்தம் ‘ இப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் இளம் நாயகன் விராட் கர்ணா நடிக்க, இவருடன் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டுள்ளார்.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி- தாடி- நேர்த்தியான உடல் அமைப்பு- சட்டை இல்லாத தோற்றம் – ரத்தக் களரி என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது. சாகசம் கலந்த காவிய படமாக உருவாகி வரும், ‘நாக பந்தம்’ என்பது ஆன்மீக மாயவாதத்தையும், சிலிர்ப்பூட்டும் சாகசத்தையும் இணைக்கும் ஒரு இந்திய காவியமாகும்.இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களின் மறைக்கப்பட்ட ரகசியத்தை இந்த திரைப்படம் ஆய்வு செய்கிறது. குறிப்பாக நாக பந்தத்தின் புனித நடைமுறையை மையமாகக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாத் போன்ற ஆலயங்களில் சமீபத்திய புதையல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தெய்வீக இடங்களை சுற்றியுள்ள வசீகரிக்கும் வகையிலான புராணங்களின் அடிப்படையிலும் .. அவற்றை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிரான சடங்குகளையும் பிரதிபலிக்கிறது. இப்படம் ஒரு பழமையான மர்மங்களை புதிய நவீன கதையம்சத்துடன் உயிர்ப்பிக்கிறது.என்கிறார் இயக்குனர் அபிஷேக் நாமா. தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். சௌந்தர்ராஜன் கவனிக்க, அபே இசையமைக்கிறார். இந்த வருடமே வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடி[ப்பு மும்முரமாக நடந்து வருகிறது.