நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசாக வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை, தி.நகர் அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று  (12.01.25) நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் எம்.நாசர், செயலாளர் திரு.விஷால், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், அறக்கட்டளைக் குழு உறுப்பினர் லதா சேதுபதி ஆகியோர் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி சிறப்பித்தனர். பிரேம் குமார், தளபதி தினேஷ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.