இப்படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரில், சன்னி தியோல், அதிரடியான அவதாரத்தில், ஒரு பெரிய துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு, மிரட்டலாக தோற்றமளிக்கிறார். ஹெலிகாப்டர் பின்னணியில் வட்டமிடுகிறது மற்றும் நாணயத் தாள்கள் காற்றில் பறக்கின்றன. சன்னி தியோல் தோற்றம் ரசிகர்களை குதூகலப்படுத்துகிறது.
உலகளவில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி சாதனை படைத்த டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். புஷ்பா 2 திரைப்படத்துடன், உலகளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 12,500 திரைகளில் திரையிடப்பட்ட இந்த டீசர், இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிரடி ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் எனபதை உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் ஆக்சன் ஸ்டாரான சன்னி தியோல், இப்படத்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் அதிரடியில் மிரட்டவுள்ளார்.
இப்படத்தில் ரன்தீப் ஹூடா, வினீத் குமார் சிங், சயாமி கெர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரடி ஆக்ஷனுடன் கூடிய பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.
“ஜாட்” திரப்படத்திற்கு தமன் எஸ் இசையமைக்கிறார், ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, நவின் நூலி எடிட்டிங் மற்றும் அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பைக் கையாளுகிறார். அனல் அரசு, ராம் லக்ஷ்மண் மற்றும் வெங்கட் ஆகியோரின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியீட்டு அறிவிப்பு ரசிகர்களிடம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னி தியோலின் “ஜாட்” திரைப்படம், அதிரடி ஆக்சன் ஜானரில் புதுவிதமான சினிமா அனுபவத்தைத் தரும் அருமையான படைப்பாக இருக்கும்.