‘திரிஷ்யம்’ 3 ம் பாகம் உருவாகிறது!
By
admin on February 21, 2025
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, எஸ்தர் அலி, ஆஷா சர்த், சித்திக், கலாபவன் மணி, ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், திரிஷ்யம். இப் படம் தமிழில் கமல் ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற தலைப்பில் வெளியாகி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து தெலுங்கு,இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகம் வெளியானது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது.இக்கதையின் இறுதி பாகமாக ‘த்ரிஷ்யம் 3’ இருக்கும் என சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியிருந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் 3ம் பாகம் குறித்த அறிவிப்பை நடிகர் மோகன் லால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது. திரிஷ்யம் 3 உறுதி செய்யப்பட்டது என்று பதிவிட்டு, இயக்குநர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.