‘யாக்கை’ பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்துள்ள புதிய படம், ‘வருணன்’ (காட் ஆப் வாட்டர்) இப்படத்தில் நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்க, ‘பிக் பாஸ்’ கேப்ரியல்லா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, சரண்ராஜ்,ஷங்கர்நாக் விஜயன், ஹரிப்ரியா, ‘ஜீவா’ ரவி, மகேஸ்வரி, பிரியதர்ஷன், அர்ஜுன்ணா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கௌஷிக், டும்கான் மாரி, கிரண்மயி, பேபி ஜோயிஸ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ஜெயவேல் முருகன் கூறியதாவது, “இப்படம் தண்ணீர் அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. தண்ணீரின் தேவையும், பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய .இயற்கையை சீண்டினால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லியுள்ளோம். இப்படத்தில் நடிகர் சத்தியராஜ் ‘காட் ஆப் வாட்டர்’ என்ற கதாபாத்திரத்திற்காக மொத்தம் மூன்று நிமிடங்கள் குரல் கொடுத்துள்ளார். அவரது குரலில் தான் படமே தொடங்குகிறது. இப்படத்தின் கதைக்களம், சென்னை ராயபுரம் பகுதியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ராதாரவி, ‘ஆண்டவர் வாட்டர் சப்ளையர்ஸ்’ என்ற வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு போட்டியாக அதே பகுதியில் சரண்ராஜ் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இருவரும் நண்பர்களாகவும் உள்ளனர். இந்நிலையில்,மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐந்து இளைஞர்கள் ராதாரவி நடத்தும் நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்கின்றனர். அவர்களுக்கும் சரண்ராஜ் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல், அவர்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை காதல், மோதல் நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறோம்” என்கிறார் இப்படத்தின் வசனத்தை என். ரமண கோபிநாத்எழுதியுள்ளார். ஒளிப்பதிவை எஸ்.ஸ்ரீராம சந்தோஷ் கவனிக்க,’போபோ’ சசி இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் இணை தயாரிப்பை வான் புரொடக்ஷன் ஜெயவேல் முருகன் ஏற்றுள்ளார்