தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 100 ஏக்கர் நிலம் வழங்கினார். அந்த இடத்தின் அரசாணையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து புதுப்பித்து தந்த மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் திரையுலகினர் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளார்
அதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு.வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், மாண்புமிகு. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. மு. பெ.சாமிநாதன் அவர்களுக்கும், மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
” முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் மு கருணாநிதி தமிழ் திரைத்துறை நகரம்” என்று நுழைவாயில் வரவேற்பு வளைவில் (Arch) பெயர் பலகை வைக்கவுள்ளோம்.
மேலும், அந்த குடியிருப்பு வளாகத்தின் உள்ளே முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் முழு திருவுருவச்சிலை அமைக்கபடவுள்ளது, அந்த திருவுருவச்சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களில் திறந்து வைக்கப்படும். என்பதை ஒட்டு மொத்த தமிழ் திரையுலகம் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.