நடிகை தமன்னா-நடிகர் விஜய் வர்மா காதல் முறிந்தது!

 

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில்,
கடந்த 2023ம் ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமன்னா மற்றும் விஜய் வர்மா ஒருவருக்கொருவர் உதட்டு முத்தம் கொடுக்கும் வீடியோ அவர்களது நண்பர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டு வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது. இதையடுத்து இருவரும் காதலித்து வருவதை ரசிகர்களுக்கு அறிவித்து ல் விழுந்ததை ரசிகர்கள் அறிந்துக் கொண்டனர்.லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2வில் விஜய் வர்மாவுடன் தமன்னா இணைந்து படுக்கையறை காட்சிகளில் எல்லை மீறி நடித்த நிலையில், இருவருக்கும் காதல் தீ கப்பென பற்றிக் கொண்டது என்றும் தெரிய வந்தது.மேலும் இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததும் அம்பலமானது. இருவரும் தங்களது திருமண தேதியை அறிவிப்பார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இந்த ஜோடி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை .திடீரென இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.