இசை விருந்தாக இருக்கும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.இதனால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது? உங்களுக்கு அப்படி இருக்கும் பொழுது, எனக்கு எப்படி இருக்கும்?இதை ஒரு மனிதனாக உணர்கிறேன்.எல்லோரும் வாழ்த்தி இசை நிகழ்ச்சி நன்றாக நடப்பதற்கு இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.இன்க்ரிடபிள் இந்தியா போன்று, இன்கிரிடபிள் இளையராஜா. இனிமேல் இதுபோன்று யாரும் வரப்போவதும் இல்லை. இதுவரையில் வந்ததும் இல்லை. இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல. இந்த நாட்டுக்கு கிடைத்த பெருமை.என்று கூறியவர் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கக் கூடாது.என்னுடைய வேலையில்,
நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்கிறீர்களா? என்பது உங்களுக்கு தான் தெரியும்.எல்லோரும் சேர்ந்து தான் நான். நம்மளுடைய பெருமையை தான் அங்கே சென்று நான் பறை சாற்றுகிறேன். இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்”. இவ்வாறு இளையராஜா கூறிவிட்டு சென்னைவிமான நிலையத்திற்குள் சென்றார்.